Editorial / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாட்ஸ் அப் வழியாக வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால் இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 1.9 லட்சம் பணத்தை இழந்துள்ளார். மகாராஷ்ராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் அரசு ஊழியர் ஒருவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார்.
ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெறவிருந்த ஒரு திருமணத்திற்கான அழைப்பிதழை அந்த ஊழியர் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பெற்றுள்ளார்.
அந்த அழைப்பிதழ் ஒரு PDF கோப்பு போல் தோன்றினாலும், அது உண்மையில் ஒருவரின் மொபைலை ஹேக் செய்வதற்கான APK கோப்பு ஆகும்.
பாதிக்கப்பட்டவர் அந்த கோப்பை கிளிக் செய்தபோது, சைபர் குற்றவாளிகள் அவரது மொபைல் ஃபோனில் இருந்து தனிப்பட்ட தரவுகளை திருடி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1.9 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இது குறித்து ஹிங்கோலி காவல் நிலையத்திலும் சைபர் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
45 minute ago