2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வார இறுதியில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள்?

J.A. George   / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதை முடிவு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட்-19 ஐ தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு இடையே இன்று(13) முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

அமைச்சர்கள், சுகாதார பணிப்பாளர் மற்றும் நிபுணர்கள்  பங்கேற்று, தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட முடிவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

மூத்த பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை என்பதால் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் நேற்று(12) கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X