J.A. George / 2021 ஜனவரி 15 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதி விபத்துகள் காரணமாக நேற்று(14) மாத்திரம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் 7 மரணங்கள் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் நேர்ந்துள்ளதுடன், ஏனைய 06 பேர் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேடிக்கைக்காக அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 12 பேர் பிலியந்தலை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் இன்று(16) வழக்கு தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .