2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வெயாங்கொடையில் அனைத்து கடைகளுக்கும் பூட்டு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெயாங்கொடையில் உள்ள அனைத்து கடைகளையும் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெயாங்கொட வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெயாங்கொடை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அனைத்து கடைகளும் இன்று முதல் 21 ம் திகதி வரை மூடப்படும்.

கடந்த காலங்களில் வெயாங்கொட பகுதியில் அதிக தொற்றாளர்கள் பதிவாகுவதாகவும்,  இதுவரை பதிவாகியுள்ள 18 இறப்புகளையும் கருத்தில் கொண்டு, நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக கடைகளை மூட வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது என அதன் தலைவர் எஸ்.ஐ.எஸ் வீரசிங்க கூறினார்.

இருப்பினும், தொழிற்சங்கத்திற்குச் சொந்தமில்லாத சில கடைகள் மட்டுமே இன்று திறந்திருந்தன.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X