2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஷானி அபேசேகரவுக்கு SSP பதவி

George   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவை, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக பதவியுயர்த்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி உயர்வானது, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுவின்றது.

குற்றத் தடுப்பு தொடர்பில் ஷானி அபேசேகரவுக்கு உயர்ந்த அனுபவம் உள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு உள்ளிட்ட இலங்கையின் பலரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு இவர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X