2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஷெஹான் மாலக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி உணர்வுகளை தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இன்று (28) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் மீது அதிருப்தி உணர்வுகளை உற்சாகப்படுத்தியதற்காக அல்லது தூண்ட முயற்சித்தமைக்காக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் பிரதிவாதியை விடுவிக்குமாறு,  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா கட்டளையிட்டார்.

2021ஆம் ஆண்டு ஓகஸ் 17 அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் மருதானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, பிரதிவாதியால் இந்த குற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணைக்கான தினமாக ஜனவரி 13ஆம் திகதியை நீதிபதி நிர்ணியித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X