Freelancer / 2025 நவம்பர் 30 , மு.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின் தடை காரணமாக சிலாபம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 சிசுக்கள், இலங்கை விமானப்படையினரால் நேற்று மருத்துவர்களின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
2 சிசுக்களுடன் 10 வயது சிறுமியும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர் என விமானப்படை மேலும் கூறுகிறது.
இதனையடுத்து இலங்கை விமானப்படைத் தளத்தின் இலக்கம் 04 ஆவது படையணியைச் சேர்ந்த Bell-412 ரக ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் கட்டுநாயக்க முகாமுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து நோயாளர் காவுவண்டி மூலம் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என விமானப்படை கூறியுள்ளது. (a)

2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026