Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 05 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் 79 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரை உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
05.02.1933 ஆம் திகதி பிறந்த சம்பந்தன், இன்று திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் காலை வழிபாடுகளில் பங்குபற்றிய பின்னர் திருகோணமலை நகரமண்டபத்தில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் நிர்வாகத்தில் உள்ள வடக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உபதலைவர்களுக்கான கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக வந்தார். அப்போது அவருக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பொன்னாடைபோர்த்தி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா, வலிகாகமம் மேற்கு பிரதேச சபையின் தலைவர் திருமதி ஐங்கரன் நாகரஞ்சனி ஆகியோர் பொன்னாடை போர்த்தி சம்பந்தனை வாழ்த்துவதையும் நல்லூர் பிரதேச சபையின் உபதலைவர் திருமதி கோமதி ரவிதாஸ், திருமதி நாகரஞ்சனி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோர் சம்பந்தனுடன் நிற்பதையும் படங்களில் காணலாம்.
neethan Monday, 06 February 2012 08:55 PM
வாழ்த்துகள் ஐயா. வடக்கிலிருந்து மாவை, கோமதி வந்து வாழ்த்தும் போது, நீங்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ள மாகாண முதலமைச்சர் எங்கே சென்று விட்டார்? நாட்டில் இல்லையா? அவரது பிரதிநிதியேனும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையா?
Reply : 0 0
kalakkan Friday, 10 February 2012 02:11 AM
உங்கள் தலைவர் தான் அடிக்கடி நாட்டில் இருக்க மாட்டார். தனது தொகுதியில் எத்தனை நாட்கள் இருந்துள்ளார் என்று திருமலை மக்களை கேட்டு விட்டு விமர்சனம் எழுதுங்கள். எங்கள் முதல்வர் வருடம் முழுதும் மக்களுடன் தான் இருக்கிறார்.......
Reply : 0 0
Ahamed Friday, 24 February 2012 12:54 AM
வாழ்த்துக்கள் ஐயா,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago