2025 மே 19, திங்கட்கிழமை

'கன்னியா வெந்நீருற்றுக்கான உரித்து தமிழர்களுடையதாக இருக்க வேண்டும்'

Thipaan   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், பதூர்தீன் சியானா

கன்னியா வெந்நீருற்றுக்கான உரித்து, பாரம்பரிய மக்களான தமிழர்களுடையதாக இருக்கவேண்டும் ஏனைய மக்கள் சுதந்திரமாக இங்கு வந்து வளங்களை  அனுபவிக்க முடியும். எனினும், உரிமைகள் தமிழர்களுடையதாக வந்து சேரவேண்டும் என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச சபையால் (உப்புவெளி) முன்னெடுக்கப்பட்ட, கொத்தனி அடிப்படையிலான வேலைத்திட்டம், திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதியில் வியாழக்கிழமை (18) காலை 8.00 மணியளவில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியும் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சுதாகரன் மற்றும் உப்புவெளி பிரதேச சபை செயலாளர் திருமதி அசோக்குமார் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X