2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'துரிதமாக ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்காக நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சையை மீண்டும் நடத்தி, அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் வேண்டுகோள் விடுத்தார்.

மாகாண சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காக கடந்த மார்ச் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த ஜுன் மாதம் பரீட்சை நடத்தப்பட்டது. பெறுபேறுகள் கடந்த ஒகஸ்ட் மாதம் வெளியாகின. வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் முடிவுகள் திருப்திகரமாக  அமைந்திருக்கவில்லை.

உதாரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் 114 ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. ஆனாரல் பரீட்சையில் 20 பேரே சித்தியடைந்தனர். இதன் மூலமாக எவ்வகையில் நாம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்?

மேலும், எமது மாவட்டத்தைச் சேர்ந்த ஆங்கில உயர் கற்கை டிப்ளோமாதாரிகள், சித்தியடைந்த பரீட்சார்த்திகளின் பட்டியலில் இடம்பெறாமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கவலையளிக்கின்றது. இவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.

அத்துடன், சித்தியடைந்தவர்களை உடனடியாக ஆசிரியர் பணிக்கு அமர்த்த வேண்டுமென்பதுடன், பற்றாக்குறையாகவுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை  நிரப்புவதற்காக விரைவில் மீண்டும் போட்டிப் பரீட்சையை நடத்த வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X