2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போலி முகவர் நிலையம் நடத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

வெளிநாடு செல்வதற்கான போலி முகவர் நிலையமொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் ஒருவரை திருகோணமலை, முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் போலி முகவர் நிலையம் இயங்கிவருவதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்; திருகோணமலை மாவட்டக் கிளைக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பணியகத்தின் திருகோணமலை மாவட்டக் கிளை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியபோது, குறித்த முகவர் நிலையத்தைக் கண்டுபிடித்ததுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபரிடமிருந்து 3 கடவுச்சீட்டுகளையும் வீஸா தொடர்பான போலி ஆவணங்களையும் போலி வைத்திய அறிக்கை ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபரை நாளை வெள்ளிக்கிழமை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X