2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

46 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்று

Princiya Dixci   / 2016 ஜூன் 07 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கும்புறுப்பிட்டியில் அரசுக்குச் சொந்தமான காட்டுப்பகுதியிலுள்ள இரனக்கேணி குளத்துக்குள் 46 முதிரை மரக்குற்றிகளை இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளிப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே முதிரை மறக்குற்றிகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று (07) வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X