Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, சிங்ஹபுரப் பிரதேசத்தில் 19 வயதுடைய மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 20 வயதுடைய கணவரை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, சனிக்கிழமை (03) உத்தரவிட்டார்.
கணவன், மனைவி ஆகிய இவர்கள் இருவரும் சிங்ஹபுரப் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த 26ஆம் திகதி சந்தேக நபர், மனைவியைக் கொலை செய்து துணியால் மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபரைத் தேடிவந்த நிலையில், அவர் கொழும்பிலுள்ள பழக் கடையொன்றில் வேலை செய்துவருவதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்று சந்தேக நபரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
31 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
47 minute ago
1 hours ago