2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மே 10 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

திருகோணமலை, மாவடிச்சேனை - சூரநகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஜ.எம்.றிஸ்வான், நேற்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டார்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் மாவடிச்சேனை-முட்டிச்சேனையைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தாய் கடைக்குச் சென்ற வேளை வீட்டுக்கு வந்த இனந்தெரியாக நபரொருவர், 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சேநுவரப் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை தேடிவருவதாக சேநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் மேற்படி இரு சிறுமிகளும் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகப்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .