2025 ஜூலை 09, புதன்கிழமை

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளின் தலைமைப் பணிமனை திருமலையில் திறந்துவைப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன் )
 
கிழக்குமாகாண பாலர் பாடசாலைகளை ஒன்றிணைக்கும் வகையில் மாகாண பாலர் பாடசாலைகளின் தலைமைப் பணிமனை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் நேற்று புதன்கிழமை திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது.
 
கிழக்குமாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டு மாகாணசபையில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் கொண்டுவரப்பட்ட 'பாலர் பாடசாலை கல்வி நியதிச்சட்ட மூலம்' அங்கிகரிக்கப்பட்டு இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்தே மேற்படி தலைமைப் பணிமனை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் 'இப்பணிமனையானது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாலர் பாடசாலைகளையும் ஆசிரியர்களையும் பதிவு செய்தல், பாலர்பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்தல், பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பள சமமேம்பாட்டினை அமுல்படுத்தல் போன்ற திட்டங்களை செயற்படுத்தும். கிழக்குமாகாண சபை பல்வேறு சட்ட மூலங்களை இயற்றியுள்ள போதிலும் பல இன்றும் அங்கிகரிக்கப்படாத நிலையில்இ தற்போது பாலர் பாடசாலைப் பணியகத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
 
கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால்இ பாலர் பாடசாலையின் கல்வியில் 9ஆவது இடத்தில் இருப்பது வேதனைக்குரியது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் எதிர்வருகின்ற காலத்தில் பாலர் பாடசாலை கல்வியினை சீரமைப்பது தொடர்பில் இப்பணியகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்... 'சமூகத்திற்காக பாடுபடுகின்ற புத்திஜீவிகள் குழாமைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்ற இப்பணியகம், தன்னாலான தியாக சிந்தனையோடு சேவையாற்றுகின்றபோது நாம் எதிர்பார்க்கின்ற பலனை அடைய முடியும்.

பாலர் பாடசாலை கல்வியானது கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாகும். காரணம், கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களினால் சிறுபிள்ளைகளுக்கான கல்வியினை வழங்குவதில் பல இடர்பாடுகள் இருந்தன. பெற்றோர்கள், பிள்ளைகளை வெளியில் கொண்டு கற்பிப்பதற்கு அச்சப்பட்டார்கள். ஆனால் தற்போது அவ்வாறில்லை. இப்போதைய சாதகமான சூழலை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். விசேடமாக நகரப்புறங்களை அண்டிய முன்பள்ளிகள் மிகவும் திறமையாக செயற்படுகின்றது. இதனை வைத்துக் கொண்டு பாலர் கல்வி அபிவிருத்தி அடைந்திருக்கின்றது எனக் கூறமுடியாது. மிகவும் முக்கியமாக நாம் அக்கறை கொள்ள வேண்டிய பிரதேசங்கள் கிராமங்களே ஆகும். கிராமங்களில் இருக்கின்ற பிள்ளைகளுக்காக கல்வி சரியாக போதிக்கப்பட்டு ஊதியம் இல்லாமல் அனேகமான ஆசிரியர்கள் சேவை செய்தல் சாதகமான அம்சமாகும். பெற்றோர்களின் அக்கறை இன்மை பொருத்தமற்ற சூழல் என்பதன் காரணத்தினால் அங்குள்ள பிள்ளைகளின் கல்வி சீராக இடம்பெறுவதில்லை இவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் நிவர்த்தி செய்கின்ற ஒரு மையமாக இப்பணிமனை திகழ வேண்டும்...' என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் என்.நடராஜாஇ கிழக்கு மாகாண முதலமைச்சரின் சிரேஷ்ட ஆலேhசகர் கலாநிதி எஸ்.விக்கினேஸ்வரன்இ முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன்இ கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம்இ திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளர் சுலோசனா ஆனந்தராஜாஇ கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் நிருவாகம் எஸ்.கருணாகரன் உட்பட பெற்றோர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .