Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாளை செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
திருகோணமலைக்கு விஜயம் செய்யும் அவர், சமயத் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறியவுள்ளார்.
காலை 9. 30 மணிக்கு கந்தளாய் பிரதேசத்தில் அக்போபுர விகாரையிலுள்ள பௌத்தமதத் தலைவர்களையும் மதியம் 2.00 மணிக்கு கிண்ணியா பெரிய பள்ளிவாசலில் ,ஸ்லாம்மதத் தலைவர்களையும் மாலை 4.00 மணிக்கு திருகோணமலை பெரியகடை புனித மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்தவ மதத்தவர்களையும் மாவட்ட செயலகத்தில் மாலை 5.00 மணிக்கு ,ந்துமதத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் வரலாற்று பெருமைமிக்க திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
பௌத்தசாசன பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
34 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
6 hours ago
9 hours ago