2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதி சந்திப்பு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(சி.குருநாதன், அமதோரு அமரஜீவ, ஜிப்ரான் )

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் திருமதி டயாரிடோ ஹே இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணயளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முக்கிய கலந்துரையாடலை நடத்தினார்.

திருகோணமலை வரோதயா நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் உலக வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை உலக வங்கியின் அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட இருக்கின்ற எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதாக முதலமைச்சரின் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X