Kogilavani / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(முறாசில்)
மூதூர் பிரதேசத்திற்கு கமநல சேவைகள், வனவிலங்கியல் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன திடீர் விஜயமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.
இதன்போது, மூதூர் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துகொண்டதுடன் விவசாய சம்மேளனங்கள் முன்வைத்த பல கோரிக்கைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
மூதூரில் செயலிழந்து போயுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையை சீரமைத்து கொடுப்பதற்கும் படுகாட்டுவெட்டை முதலான விவசாயக் காணிகளில் நிலவும் உரிமைப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கும் தேவையான வயல் நிலங்களுக்கு நீர்பாசன கால்வாயை விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் இதன்போது அமைச்சர் கூறினார்.
திருகோணமலை மாவட்டத்தில் யானைகள் சரணாலயம் ஒன்றை கந்தளாய் அக்போபுர வனப்பகுதியில் அமைப்பதற்கும் ஒழுங்கு செய்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago