2025 மே 03, சனிக்கிழமை

வீதி விபத்தில் இருவர் பலி

Super User   / 2012 மார்ச் 08 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

கந்தளாய், ஹபரண வீதியில்  யகா வங்குவ எனும் இடத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை லொறி வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயத்துடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் லொறி சாரதியான மூதூர் ஆஸாத் நகரை சேர்ந்த 59 மைல்கலை  சேர்ந்த 22 வயதான கபீர் ஜரீஸ் மற்றும் அதே இடத்தை சேர்ந்த 25 வயதான லொறி உதவியாளரான கே. நஜாத் ஆகியோரே விபத்தில் பலியானவர்களாவர்.

இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார்; மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X