Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 11 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்,கஜன்)
திருகோணமலையில் மெய்வல்லுனர் மற்றும் பெரு விளையாட்டுப் போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் அதிகூடிய புள்ளிகளை பெற்று பற்றிமா விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் 2012ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடத்தப்பட்டன.
மெக்கேசியர் விளையாட்டு அரங்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இரண்டாம் இடத்தை செல்வநாயகபுரம் விளையாட்டுக்கழகம் பெற்றது.
பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, கலாசார, காணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.என்.எம்.புஸ்பகுமார முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் இசாந் விஜயதிலக்க கலந்து கொண்டார்.
மெய்வல்லுனர் மற்றும் பெருவிளையாட்டுப் போட்டிகளில் பத்து விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின.
sivanathan Monday, 12 March 2012 04:31 AM
மெய்வல்லுநர் ஆண்கள் பிரிவில் ஓல்ட் இந்து 63 புள்ளிகள் பெற்று பற்றிமா கழகத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியமை உங்களுக்குத் தெரியாதா? ரமன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago