2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புலிகளின் இராணுவ பிரிவுத் தலைவர் பதுமன் பூஸாவுக்கு மாற்றம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பகுதிக்கான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பிரிவுத் தலைவரான பதுமன் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம்; என்பரை திருகோணமலை தடுப்புக்காவல் சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலையின் பயங்கரவாதிகள் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் புலனாய்வுப் பிரிவினர், இச்சந்தேக நபருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளதால் அவரை பூஸாவுக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இருப்பினும் சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி 2012ஆம் ஆண்டில் நீதிமன்றத்துக்கு கொண்டுவருமாறும் நீதவான் பணித்துள்ளார். (அமதோரு அமரஜீவா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .