2025 மே 03, சனிக்கிழமை

மூதூர் மத்திய கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

திருகோணமலைக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்ட  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன்,  கிண்ணியா மற்றும் மூதூர்ப் பகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

மூதூர் மத்திய கல்லூரியின் உபஅதிபர் எஸ்.ஏ.நஸீர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலிலும் அமைச்சர் பங்குபற்றினார். அத்துடன், இக்கல்லூரிக்கு கணினியொன்றையும் வழங்கிவைத்தார்.

மூதூர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துகொண்டார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், கிண்ணியா நகரபிதா டாக்டர் எம்.எம். ஹில்மி   உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X