2025 மே 02, வெள்ளிக்கிழமை

'திருமலை தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் சீர்திருத்தப்படும்'

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் விரைவில் சீர்திருத்தப்படும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

தக்வாநகருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு பொது மக்கள் மத்தியல் உரையாற்றும்போதே திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நிலாவெளி பகுதியில் இதற்கென விசேட் கூட்டம் கூட்டப்பட்டு அங்கு  பிரதேச  கிளைகளின் பிரதி நிதிகள் அழைக்கப்பட்டு கட்சி புனரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.  தேர்தல் ஒன்று நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் கட்சியின் தனித்துவத்திற்கு ஏற்ற வகையில் போட்டியிடுவது பற்றி தீர்மானிக்கப்படும்' என மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X