2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையில் வடகிழக்கு அரசாங்க ஊழியர் சங்கத்தின் மே தின கூட்டம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

வடகிழக்கு அரசாங்க ஊழியர் சங்கத்தின் மே தின நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 2.00மணியளவில் இடம்பெறவுள்ளது.

வடகிழக்கு அரசாங்க ஊழியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சுரேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்னசிங்கம், திருகோணமலை நகரசபை தவிசாளர் செல்வராசா, திருமலை பட்டினமும் சூழலும் தவிசாளர் இரா.விஜயரட்னம், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தர்மகுலசிங்கம், வடகிழக்கு அரசாங்க ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் த.ஹம்சநாதன், விஜிதராசா, கே.ஜோசப் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

கடந்த மேதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான மே தின கூட்டம் திருகோணமலையில் இடம்பெறுகின்றது.

இந்த மேதின கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்படவுள்ளதாகவும் வடகிழக்கு அரசாங்க ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X