2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மரணத்தின் பின்னரும் தமிழருக்கு நின்மதி இல்லை ; நந்தகுமார்

Super User   / 2014 ஜூன் 03 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

தமிழர்கள் தமது மரணத்தின் பின்னரும் நிம்மதியாக  கல்லறைகளில் உறங்கமுடியாத பரிதாபம்  திருகோணமலையில் ஏற்பட்டள்ளது என திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் தெரிவித்துள்ளார.

திருகோணமலை அன்புவழிபுரம் பொது மயானத்தில் இருக்கும் கல்லறைகளில் உள்ள தமிழ் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் கடந்தவாரம் சேதமாக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்; என அவர் அவர் வெளியிட்டுள்ளா ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சண்டையிட்ட நாடுகள் சண்டையின் பின் ஒரு நாடு மற்றைய நாட்டினை கைப்பற்றினாலும் எதிரி நாட்டில் உள்ள கல்லறைகள், பிரமுகர்களின் நினைவிடங்களை பாதுகாப்பளிப்பது சர்வதேச நாடுகளில் உள்ள தார்மீக சட்டமுறையாகும். அனால் தமிழர்கள் என்ற காரணத்தால் தமிழர்கள் தமதுமரணத்தின் பின்னரும் மயானங்களில் உள்ள கல்லறைகளில் நிம்மிதயாக உறங்கமுடியா பரிதாபம் இங்கு ஏற்பட்டள்ளது என அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X