2026 மார்ச் 30, திங்கட்கிழமை

இராணுவ வீராங்கனை தற்கொலை

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை 22 ஆம் படைப்பிரிவு பிலாண்டன் பொயின்ட் இராணுவ முகாமில் இராணுவ வீராங்கனை இருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவது நேற்று 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தை சேர்ந்த அகங்கம பிரதேசத்தைச் சேர்ந்த நமிதா டிசானி (வயது-29) கடந்த 08 வருடகாலமாக இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்; இவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எம்-58 எனும் ரக துப்பாக்கியால் தனது வயிற்றுப்பகுதியில் சுட்டதன் விளைவாக துப்பாக்கி ரவை இவரின் முதகுப்புரமாக வெளியேறியதனால் இவர் உயிரிழந்நதாக மரண விசாரனையின் மூலம் தெரியவந்தள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் தி.திருச்செந்தில்நாதன் சடலத்தை பார்வையிட்டதுடன் மரண விசாரனையையும் நடாத்தினார். அத்துடன் சடலத்தை அவருடைய சகோதரரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .