2026 மார்ச் 30, திங்கட்கிழமை

கடற்படை கழிவகற்றும் கொள்கலன் மோதி, மின் கம்பம் முறிவு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எஸ்.சசிக்குமார்


திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடற்படை கழிவகற்றும் கொள்கலன் வாகனம் மோதியத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது.

மரத்தடி பகுதியை நோக்கி பயணித்த கடற்படை கழிவகற்றும் கொள்கலன் வாகனம், திருஞானசம்பந்தர் வீதியில் சரஸ்வதி திரையரங்குக்கு அருகாமையில் உள்ள மின்கம்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை(15) மோதியதாலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் கடற்படை வாகனம் சிறு சேதத்துக்கு உள்ளாகி உள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த திருகோணமலை நகர சபை தீயணைப்பு வீரர்கள்  நிலமையை சமாளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஸ்தலத்துக்கு விரைந்த மின்சார சபையின் பொறியியல் பிரிவினரும் நிலைமைகளை சரிசெய்தனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அப் பிரதேசத்தில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .