2026 மார்ச் 30, திங்கட்கிழமை

கரிமலையூற்று பள்ளிவாசலை புனரமைத்து தருவர்: மஜீத் தகவல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

திருகோணமலை வெள்ளைமணல் கரிமலையூற்று பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி லால் பெரேராவை சந்தித்து தான் முக்கிய பேச்சுவார்த்தை  நடாத்தியுள்ளதாகவும் இந்தப் பள்ளியை இரண்டு வார காலத்திற்குள் புனரமைத்து தருவதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீம் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கரிமலையூற்று பள்ளிவாயல் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டமை தெரிந்தவுடன் இதன் உண்மை நிலையை அறிவதற்காக அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் பிரதேசத்திற்கு உடனடியாக விஜயம் செய்தேன்.

உடைக்கப்பட்ட பள்ளியைப் பார்வையிட்டு உண்மை நிலையை அறிந்த பின்னர் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி திருமலை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதி மற்றும் கரிமலை ஊற்று முகாமுக்கு பொறுப்பான இராணுவத் தளபதி ஆகியோருடன் உத்தியோக பூர்வ வாசஸ்தளத்தில் வைத்து பேச்சுவார்;த்தையை நடத்தினேன்.

முஸ்லிம்களின் மனநிலை குறித்து 400 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளியின் வரலாறு குறித்தும் படை உயர் அதிகாரிகளுக்கு தெரிவுபடுத்தினேன்.

இச் சந்திப்பின் போது இரண்டு வார காலத்திற்குள் இப்பள்ளியை புனரமைத்துத் தருவதாகவும் அரச மேல்மட்டத்திலிருந்து  உத்தரவைப் பெற்றுத்தந்தால் பள்ளியில் நாளாந்த தொழுகையை நடாத்துவதற்கும் இராணுவம் வழிவகுத்துத் தரும் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதி உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .