2026 மார்ச் 30, திங்கட்கிழமை

சுழல் காற்றினால் வீடுகள் மற்றும் பொதுக் கட்டடங்களுக்குச் சேதம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத், வடமலை ராஜ்குமார்,எஸ்.சசிக்குமார்

தம்பலகாமம் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்டகோவில் குடியிருப்புகிராம உத்தியோகத்தர்பிரிவில் நேற்று (21) மாலை வீசிய சுழல் காற்றினால் 28 வீடுகளும் தம்பலகாகமம் பொதுவைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் மற்றும் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் விடுதிக் கட்டடம் என்பன சேதமடைந்துள்ளன.
 
தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான், பிரதேச செயலாளர் திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி மற்றும் தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ செனவிரத்ன ஆகியோர் அனர்த்தம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளைக் கண்ணுற்று பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு தற்செயல் நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஒருநிமிடத்திற்குள் தோன்றிமறைந்த இச்சுழல் காற்றினால் வீட்டுக் கூரைகள் சுமார் 100அடி உயரமளவிற்கு தூக்கி வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .