2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர்: கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா டெவிஸ்   வெள்ளிக்கிழமை (12)  கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலமைகள் பற்றியும் அபிவிருத்தி வேலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் பிரதி உயர்ஸ்தானிகரிடம் இதன்போது கேட்டுக்கொண்டார்.

இவ்விடயம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக பிரதி உயரஸ்தானிகர் உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .