2026 மார்ச் 30, திங்கட்கிழமை

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

Thipaan   / 2014 நவம்பர் 09 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் நேற்று  (08) இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தி/சல்லி அம்பாள் மகாவித்தியாலயத்தில் இருந்து புலமைப் பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு, பதக்கம் அணிவித்தும் கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், சல்லி அம்பாள் ஆலய நிர்வாகத்தினரால் பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் சில அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், கௌரவ விருந்தினராக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன், சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக் கழக திருகோணமலை வளாக சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி விஜயலஷ்மி சுதாகரன். ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பகுதியின் கிராம உத்தியோகத்தர் , சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பல்தீவு பொது  நூலகத்தின் நூலகர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மகளிர் கிராம அபிவிருத்து சங்க நிர்வாகத்தினர்,சல்லி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர், பெற்றோர்கள் ,மாணவர்கள், என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பாடசாலையின் நூல்கள் காட்சிப்படுதப்படிருந்தமை சிறப்பம்சமாகும்..






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .