2026 மார்ச் 30, திங்கட்கிழமை

திருகோணமலை நகர சபையின் சபா மண்டபம் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை நகர சபைக்கு 15 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சபா மண்டபம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை திறந்து வைக்கப்பட்டது.

இதனை நகர சபை தலைவர் க.செல்வராசா உறுப்பினர்களுடன் இணைந்து திறந்துவைத்தார்.

1933ஆம் ஆண்டு முதலாவது சபை ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும் சபை கூட்டங்கள், நகர சபை கட்டடத்தின் ஒரு பகுதியிலேயே நடத்தப்பட்டு வந்துள்ளன.

1956.05.11 அன்று நகர சபை கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டு, நகர மண்டபமும் நகர சபை நிர்வாக கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டு 1959ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அப்போது சபை கூட்டம் நடத்துவதற்கு சபா மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.

தற்போதய நகர சபை தலைவர் க.செல்வராசா எடுத்த முயற்சியின் காரணமாக நெல்சிப் திட்ட நிதி ஒதுக்கீடு மூலம் இம் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .