2026 மார்ச் 30, திங்கட்கிழமை

ரிஸ்கியின் மரணத்தில் சந்தேகம்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரை பிற‌ப்பிடமாகவும் குருணாகலை வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கையின் பிரபலமான பிஸ்கட் கம்பெனி ஒன்றின் பிராந்திய விற்பனை பிரதிநிதியாக செயற்பட்டு வந்த முஹம்மது பாரூக் முஹம்மது ரிஸ்கி (வயது 37) என்பவர், திருகோணமலை சின்னப்பிள்ளை சேனை பகுதியல் உள்ள மாபிள் பீச்சில் கடந்த (6/12/2014) சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவரது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கபட்டது. அன்னாரது மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும், காலையில் வேலைக்கு செல்லவென புற‌ப்பட்டு சென்றவர் எப்படி திருகோணமலையை அடைந்தார் என்றும், அவரது பிரேதத்தை பெற்றுச் செல்ல வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கேள்வி எழுப்பிய போதும், அவர் நீரில் மூழ்கியே மரணமடைந்திருப்பதாகவும், அவருடன் பணி புரிந்தவர்களும் கூட இருந்ததாகவும் பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்படுகின்றது. அன்னார் மரணமான பகுதி இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படுவதும், அப்பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதும் இவ்வாரான ஒரு சம்பவம் நடைபெற்றமை குறித்தும் கேள்வி எழுப்பபடுகின்றது. 

இம்மரணம் தொடர்பாக இறந்தவரது தகப்பனார் முஹம்மது பாரூக் அவர்களிடம் வினவியபோது, விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதற்கமைய தான் காரியமாற்ற போவதாகவும், இது சம்பந்தமாக மேலும் கருத்து தெரிவிக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மரணமான ரிஸ்கி என்பவரே அக்குடும்பத்தை பரிபாலித்து வந்த ஒரே ஆண் வாரிசு என்று தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .