Gavitha / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்டத்தில் மூட்டுவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச வைத்திய சிகிச்சை முகாம் இன்று (21) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட மூட்டுவாத சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட வரிய நோயாளர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், மருந்துப்பொருட்கள் மற்றும் ஒவ்வொரு நோயாளிக்கும் 500 ரூபாய் பணத்துடன் உணவுப் பொதி ஒன்றும் இங்கு வழங்கபட்டன.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தளாய், தம்பலாகமம், சீனக்குடா, அபேபுர, திருகோணமலை, உப்புவெளி போன்ற பகுதிகளில் இருந்து வந்த மக்கள் சிகிச்சை பெற்றனர்.
மூட்டு வாத நோய் விஷேட வைத்திய நிபுணர்களான டாக்டர் திருமதி ஹேரத், டாக்டர் ஆரியசிங்க மற்றும் இயல் தொழில்சார் வைத்திய நிபுணர்களும் இந்த இலவச வைத்திய முகாமில் பங்கேற்றிருந்தனர்.
இந்த சிகிச்சை முகாம் குறித்து திருகோணமலை மாவட்ட மூட்டு வாத நோயாளர் சங்கத்தின் ஆலோசகரும் தம்பலாகமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் ஏ.ஜே.எம்.அஜீத் கருத்துத் தெரிவிக்கையில்,
'கிழக்கு மாகாணத்திலே மூட்டுவாத விஷேட நிபுணர்கள் இல்லாத நிலையில் மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக இந்த வைத்திய முகாமை நடாத்தி வருகிறோம்.
திருகோணமலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாக இருப்பதால், இவர்கள் கண்டி மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் பொருளாதார ரீதியாகவும் போக்குவரத்து ரீதியாகவும் பல்வேறு சிரம்மங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் இலவசமாக சகல சேவைகளையும் கடந்த மூன்று வருட காலமாக எமது வழங்கி வருகின்றது.
இங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மாத்திரமன்றி, அவர்கள் உள்ளூர் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களைப் பெருவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இவ்வாறான சிகிச்சை முகாமை திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களிலும் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடாத்துவதற்கு உத்தேசத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago