Sudharshini / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண சபையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், இருவர் வெள்ளிக்கிழமை (27) அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம். மன்சூர், வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளராகவிருந்த ஆரியவதி கலப்பதி கல்வி மற்றும் காணி அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் நஸீர் அஹமட்டிடமிருந்து நியமனங்களைப் பெற்றுக் கொண்ட புதிய அமைச்சர்கள் இருவரும், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபையில் மீதமாகவுள்ள விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு அமைச்சுகளுக்கான பொறுப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
33 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
37 minute ago
45 minute ago