Suganthini Ratnam / 2015 மார்ச் 12 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
வெளிமாவட்ட மீனவர்கள் திருகோணமலைக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.தௌபிக், மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஏ.புஸ்பக்குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தயாபரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள்¸ மீன்பிடி முதலாளிமார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போது வெளிமாவட்ட மீனவர்களால் தரித்துவைக்கப்பட்டுள்ள 38 மீன்பிடிப்படகுகளுடன், திருகோணமலை பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 மீன்பிடிப்படகுகளும் சேர்ந்து மொத்தமாக வெளிமாவட்டங்களுக்கான 48 மீன்பிடிப்படகுகள் இவ்வாண்டு இறுதிவரை மட்டும் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படும். இதன் பின்னர், எந்தவொரு வெளிமாவட்ட மீன்பிடிப்படகுகளும் இம்மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.தௌபிக், மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஏ.புஸ்பக்குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தயாபரன் ஆகியோர் தனித்தனியாக எழுத்துமூலமான கடிதங்களை மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கையளித்து இந்த நிலைமையை சுமூகமாக தீர்த்துவைத்துள்ளனர்.
இத்தீர்மானம் மூலம் இதுவரை திருகோணமலைக்கு வருகைதந்தள்ள வெளிமாவட்ட மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணமும் உள்ளூர் மீனவர்கள் பாதிக்காத வண்ணமும் தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ 1,000 வெளிமாவட்ட படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago