Gavitha / 2015 மார்ச் 17 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முழுமையான பண்புத்தர விருத்தி தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு இன்று (17) திருகோணமலை சர்வோதய நிலையத்தில் ஆரம்பமானது.
இலங்கை பண்புத்தர முகாமைத்துவ நிருவனத்தால், (டுயமெய ஐளெவவைரவந ழக ஞரயவெவைல ஆயயெபநஅநவெ) ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், கிழக்கு மாகாணத்தில் இருந்து சில தெரிவு செய்யப்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நவீன உலகில் கற்றல், கற்பித்தலுக்கு அப்பால் மாணவர்களிடத்தில் பண்புத்தர விருத்தியை, நூறு வீதம் ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்களைத் தயார்படுத்துவதே இந்தச் செயலமர்வின் நோக்கமாகும். இதற்காக கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு முழுமையான பயிற்சியை வழங்கி, அவர்கள் மூலம் ஏனைய ஆசிரியர்களுக்கும் குறித்த பயிற்சியை வழங்குவதன் மூலம் விரவாக மாணவர்கள் மத்தியில் முழுமையான பண்புத்தர விருத்தியை ஏற்படுத்த முடியும் என்று இலங்கை பண்புத்தர முகாமைத்துவ நிருவனத்தின் தலைவர் மன்காலிகா டீ சில்வா, தெரிவித்தார்.

19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago