2026 மார்ச் 26, வியாழக்கிழமை

இலங்கை முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் மூதூர் நுண்நிதி காரியாலயம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 18 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

இலங்கை முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் மூதூர் நுண்நிதி காரியாலயம் புதன்கிழமை (18)  அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக  மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் காரியாலயத்திலிருந்து  முக்கியமான  ஆவணங்களும் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய  கிளை முகாமையாளர் நிறுவனத்துக்கு பல இலட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில்,  இந்த நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை சோதனையிடுவதற்காக கொழும்பிலிருந்து முக்கிய அதிகாரிகள் வருகைதந்துள்ள நிலையிலேயே, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து,  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .