Sudharshini / 2015 மார்ச் 25 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன், செ.தி.பெருமாள்
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எல்லா பிரச்சினைகளும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது. முக்கியமாக இனங்காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு அவை கூடுமானவரை தீர்த்துவைக்கப்படும். ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றுக்கான தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்விப்பண்பாட்டு அலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்கவரத்து அமைச்சில், வலய கல்வி பணிப்பாளர்கள், தேசிய மாகாண பாடசாலை அதிபர்கள் மாகாண பணிப்பாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாக்கிழமை(24) நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில், திருகோணமலையில் மிகவிரைவில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் தேசியக் கல்வியியற் கல்லூரி ஒன்றையும் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலலித்து பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில்,
குறிப்பாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் என்ற காரணத்தால், அவர் இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக நன்கு அறிவார். எனவே, மிகவிரைவில் அவரை திருகோணமலைக்கு வரவழைத்து அவருடன் கலந்து பேசி சில பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என நினைக்கின்றேன். அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை எதிர்வருடம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செய்கின்றோம்.
நீங்கள் முன்வைத்துள்ள பல பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். மேலும் மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதுக்காக கிழக்கு மாகாணத்திற்கு 100 இலட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படவுள்ளது. எனவும் அவர் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
ஏனைய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,000 பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கூடங்கள் தொடர்பில் நிலவும் மின்சார கட்டணத்திற்கான பட்டியல் தொடர்பான சிக்கல்கள், அங்குள்ள கணணிகளை முறையாக பராமரிக்கப்படவேண்டுமானால் குறித்த கட்டடங்களுக்கான குளிரூட்டி வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும், கட்டடத்தின் தரம் தொடர்பான மதிப்பீடு ஒன்றை செய்ய வேண்டும், மின் இணைப்புகள் தொடர்பான மதிப்பீடு ஒன்றை செய்து இவற்றின் தரத்தை உறுதி செய்யதல் போன்ற பல முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தளபாட குறைபாடுகள், ஆசிரியர்கள் பற்றாக்குரைகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago