Thipaan / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
சம்பூர் அனல் மின் நிலையத்தை தமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைப்பதற்கு எதிரான பிரேரனை, மூதூர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவிசாளர் ஏ.எம்.கரீஸ் தலைமையில், நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய சபை அமர்விலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையம் இப்பகுதியில் இயங்க ஆரம்பித்தன் பின்னர் இப்பகுதியில் ஏற்படப்போகும் சூழல்பாதிப்பு, மக்களுக்கு ஏற்படப்போகும் நோய்கள், கடல் வள பாதிப்புகள் முதலியனவற்றை தமக்குள் பேசி தீர்மானித்த சபை அங்கத்தவர்கள் 11 பேரும் இணைந்து, ஏகமனதாக இத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.
அனல் மின் நிலைய திட்டம், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படக் கூடியதாக அமையும்.
எனவே, இந்த சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமது எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான அனுமதியை மூதூர் பிரதேச சபை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago