2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நடும் வைபவம்

Thipaan   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிண்ணியா முஜாஹிதா வித்தியாலயத்தில்; 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  அமைக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டடத்துக்கான அடிக்கல், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் திங்கட்கிழமை(31) நடப்பட்டது.

இம்மூன்று மாடிக்கட்டடத்தில் வகுப்பறை நிர்வாகக் கட்டடம் என்பன அமைக்கப்படவுள்ளன.

அடிக்கல் நடும் நிகழ்வைத் தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களும் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக், கல்வி அதிகாரிகள், மார்க்க அறிஞர்கள், ஊர்ப்; பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X