Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையம் மூலம் கிழக்கில் ஒரு வளமாக்கும் கட்டமைப்பை உருவாக்குவோம். இது ஒரு வரலாற்று மாற்றத்தை உருவாக்கும் வழிகோலாக அமையும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா தெரிவித்தார்.
இத்தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு அரசியல் மாற்றங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் உருவாகாததாலேயே இன்று வரை ஒரு நல்ல அரசை அமைக்கமுடியாதுள்ளது. எனவே, மக்கள் மத்தியில் சிந்திக்கும் தன்மையை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் அரசியல் குறித்த ஆர்வம் மக்களிடம் இருக்கிறது. அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் அரசியல் குறித்து தவறான எண்ணங்கள் இருக்கின்றன.
சமூக தளங்களில் அரசியல் குறித்து பதிவு செய்யாதீர்கள் என என்னிடமே சிலர் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், சிலரின் பதிவுகளை பார்த்தால் எந்த ஒரு நோக்கமோ இலட்சியமோ இருக்காது.
இணையம் என்பது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான வரப் பிரசாதமாகும். பொழுது போக்குக்;கும் அரட்டைக்கும் பயன் படுத்தலாம் அது தவறில்லை. ஆனால், சிறிதளவேனும் சமூக சிந்தனைகள் நமக்கு இருக்க வேண்டும். சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும்.
மக்களாட்சி தத்துவத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. எமது வாழ்க்கை முறையை அரசியலே தீர்மானிக்கின்றது. அரசியலே பிடிக்காது, என்று ஒதுங்கி கொண்டாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அரசியலுக்கு உள்ளவாங்கப்படுகின்றோம்.
கடந்த நாட்களில் அரபு நாடுகளை புரட்டி போடும் அளவுக்கு இணையம் வாயிலாக புரட்சிகள் நடத்தப்பட்டன. அந்த நாடுகளின் இளைஞர்கள் சரியாக இணையத்தை பயன்படுத்தியதால் தான் புரட்சிக்கு வித்திடப்பட்டது. எகிப்து , துனிசியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற புரட்சிகள் முழுக்க முழுக்க இளைஞர்களால் நடத்தப்பட்டது.
இளைஞர்கள் புரட்சிக்கு வித்திட்ட போது அடக்கி கொண்டிருந்த ஆதங்கத்தை மக்கள் கொட்டித்தீர்த்து புதிய மாற்றத்தை உருவாக்கினர்.
அந்தவகையில் நாமும் இணையம் மூலம் கிழக்கில் ஒரு வளமாக்கும் கட்டமைப்பை உருவாக்குவோம். இது ஒரு வரலாற்று மாற்றத்தை உருவாக்கும் புதிய வழிகோலாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
11 minute ago
18 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
59 minute ago
1 hours ago