Gavitha / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா கண்டல்காடு பிரதேசத்தில் சனிக்கிழமை (04) அதிகாலை சட்ட விரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி சென்ற ஏழு நபர்களை கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,0 சட்ட விரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி சென்ற குறித்த ஏழு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஏழு மாட்டு வண்டிகளும் மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர்களை திங்கட்கிழமை (6) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .