Gavitha / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
2011ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியான பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள், புதன்கிழமை (8) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸர் அஹமதை அவரது திருகோணமலை காரியாலயத்தில் சந்தித்து, தெரிவித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்ட முதலமைச்சர், அனைத்து பட்டதாரிகளுக்குமான நியமனம் வழங்கும் ஏற்பாட்டை சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பிர் ஜே.எம்.லாஹிர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.எம்.அஸீஸ், பிரத்தியேக செயலாளர் கே.பத்மநாபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago