Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் கதிரவெளியில் சுகாதாரா சேவை நிலையம் ஒன்றை வெள்ளிக்கிழமை (10), கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஜ.எம். மன்சூர் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் சுரேஷ்பார்ட்லட் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி மற்றும் வாகரை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திசநாயக்கா ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் நிர்மாணப்பணிகள் யாவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகரை வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் அனுசரனையில் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்படி சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் கதிரவெளி பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வந்த வைத்திய சேவைகள் தொடர்பான குறைபாடு நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நிகழ்வின்போது தாய்சேய் நலனினை பரிசோதிக்கும் ஸ்கேனர் மற்றும் சுகாதார தொண்டர்களுக்காக துவிச்சக்கர வண்டிகளும் வாகரை வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

14 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago