Thipaan / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேற்பார்வை உறுப்பினராக மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், கிழக்கு முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட்டால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்களை மேற்பார்வை செய்வதற்காக அரசாங்க கட்சி உறுப்பினர்களை நியமனம்; செய்வதற்கு, கிழக்கு மாகாண அமைச்சர் வாரியம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டால் மாகாண சபை உறுப்பினர் அன்வர் சனிக்கிழமை (18) முதலமைச்சரின் கொழும்பு காரியாலயத்தில் வைத்து கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் வேலைகளை மேற்பார்வை செய்யும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .