Sudharshini / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற கலாசார விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை பகிஸ்கரித்து வெள்ளிக்கிழமை (24) வெளியேறினர்.
கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) திருகோணமலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, விருந்தினர்களாகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உட்பட மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, எம்.,ராஜேஸ்வரன் ஆகியோர் விளையாட்டுப் போட்டியை பகிஸ்கரித்து வெளியேறினர்.
கிழக்கு மாகாண சபையினால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வில், பதாதைகள் அனைத்தும் சிங்கள மொழியில் மாத்திரம் பிரசுரிக்கப்பட்டிருந்தமையே வெளியேற்றத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மை காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற விடயங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் பரவலாக இடம்பெற்று கொண்டிருக்கின்ற வேளையில், இவ்வாறானதொரு நிகழ்வும் மனசங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மாகாண சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்தனர்.
இது தொடர்பில்; கல்வி, கலை மற்றும் கலாசார அமைச்சர் உரிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
13 minute ago
17 minute ago
25 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
25 minute ago
50 minute ago