Sudharshini / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை கிழக்கு தங்க நகர் கிராமத்தில், நிர்மாணிக்கப்பட்ட 11 வீடுகளும் பாழடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் மீள்குடியேற்றத் திட்டத்துக்காக கடந்த 1999ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2006ஆம் ஆண்டு 11 வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால், இதுவரையான காலப்பகுதியில் தங்க நகர் கிராமத்தில் எவ்வித மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் அமைக்கப்பட்டுள்ள 11 வீடுகளும் பாழடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றன.
இக்கிராமத்தின் மீள்குடியேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12 minute ago
16 minute ago
24 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
24 minute ago
49 minute ago