2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ரொட்டரி கழகத்தின் 36ஆவது ஆண்டு தொடக்க விழா

Gavitha   / 2015 மே 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை ரொட்டரி கழகத்தின் 36ஆவது ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (03) ரொட்டரி இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான முன்னாள் மாவட்ட ரொட்டரி  ஆணையாளரும் திருகோணமலை ரொட்டரி கழகத்தின் ஸ்தாபக தலைவருமான ரொட்டேரியன் N.பத்மனாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது, கழகத்தின் 36ஆவது வருடத்தை குறிக்கும் முகமாக கேக் தலைவர் றொட்டேரியன் திருமதி கார்மன் அன்ரனியால் வெட்டப்பட்டதுடன் இந்நிகழ்வின் பிரதம அதிதி பத்மநாதன், புதிதாக கழகத்தில் இணைந்துகொண்ட சம்பத் வங்கி கனிஷ்ட அதிகாரி எஸ.;புருஷோத்மனுக்கு அங்கத்துவ சின்னத்தை அணிவித்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X