Suganthini Ratnam / 2015 மே 17 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் பொலிஸாரின் அசண்;டையீனமே காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'ஏற்கெனவே இறால்குழிக் கிராமத்தில் அனுமதி வழங்கப்பட்டதை விட அதிகமான படகுகளை வைத்து சட்டத்துக்கு புறம்பாக இடம்பெற்றுவந்த மணல் அகழ்வை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்தமைக்கு அமைய அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். ஆயினும், மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் பொலிஸாரின் அசண்டையீனம் காரணமாகவும் இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வு தொடர்ந்தது.
மாகாணசபை உறுப்பினர், முஸ்லிம்; காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர் உள்ளிட்டவர்கள்; இந்த மணல் அகழ்வு மக்களுடைய வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டது. இவை சட்ட ரீதியாகவே இடம்பெறுகின்றது என்று தெரிவித்தபோதும், அதிகமான படகுகளை வைத்து சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழப்பட்டமைக்கான ஆதாரங்களான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளன' என்றார்.
தொடர்ந்து இடம்பெற்ற பல தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களுக்கு அமைய மாவட்டத்தின் பிரதி பொலிஸ் அத்தியட்சகரால் சம்மந்தப்பட்ட இடத்தில் பொலிஸ் சாவடி ஒன்றை அமைத்து கண்காணிப்தாக உறுதியளித்தார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago